எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் (தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல்) சட்டம், 2017
September 12 , 2018 2658 days 893 0
சுகாதாரம் மற்றும் குடும்ப நலவாழ்வு அமைச்சகமானது மனித ஏமக்குறைப்பு நச்சுயிரி (HIV - Human Immuno deficiency Virus) மற்றும் ஏமக்குறை நோய் (தடுத்தல் மற்றும் பாதுகாத்தல்) சட்டம், 2017 ஆனது செயல்படுத்தப்படுவதை அறிவித்துள்ளது.
இது வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதாவாகும். இது எச்.ஐ.வி உடன் வாழும் ஒரு நபருக்கு வேலை வாய்ப்பு, சுகாதாரப் பராமரிப்பு, சேவைகள், கல்விச் சேவைகள், பொது வசதிகள், சொத்துரிமை, பொது அலுவலகங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள பாகுபாடுகளைப் பற்றி புகார் தெரிவிக்க உதவுகிறது.
இச்சட்டம் அனைத்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் நோயாளிகளுக்கு ரெட்ரோவைரஸ் எதிர்ப்பு சிகிச்சையை சட்ட உரிமையாக ஏற்படுத்தியுள்ளது.