TNPSC Thervupettagam

எண்ணிம அணுகல் - அடிப்படை உரிமை

May 5 , 2025 486 days 347 0
  • அரசியலமைப்பின் 21வது சட்டப்பிரிவின் கீழ் உள்ள வாழும் உரிமையை எண்ணிம அணுகல் சூழல்களிலும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • இதில் எண்ணிம அணுகல் என்பது ஓர் அடிப்படை உரிமையாகும் என்பதோடு கிராமப் புறங்கள் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலைப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உட்பட அனைவருக்கும் எண்ணிம அணுகலை அரசு உறுதி செய்ய வேண்டும்.
  • எண்ணிம அணுகல் இடைவெளியைத் தடுப்பது இனி கொள்கை சார் விருப்புரிமை சார்ந்த ஒரு விவகாரம் மட்டுமல்ல, மாறாக இனி கண்ணியம், தன்னாளுமை, பொது வாழ்வில் சமமான பங்கேற்பு ஆகியவற்றை உறுதி செய்வதற்கான அரசியலமைப்பு சார் கட்டாயமாக மாறியுள்ளது.
  • அரசியலமைப்பின் 21 [கண்ணியமான வாழ்க்கைக்கான உரிமை], 14 [சமத்துவம்], 15 [பாகுபாட்டிற்கு எதிரான உரிமை], 38 [அரசு வழிகாட்டுதல் நெறிமுறைகள்] ஆகிய சரத்துகளின்  கீழ் அரசுக்கு ஒரு கடமை உள்ளது.
  • எண்ணிம உள்கட்டமைப்பு, அரசு தளங்கள், இயங்கலை கற்றல் தளங்கள் மற்றும் நிதியியல் தொழில்நுட்பம் ஆகியவை எளிதில் பாதிக்கப்படக் கூடிய மற்றும் விளிம்பு நிலையில் உள்ள அனைத்துப் பிரிவினரும் பொதுவாக எளிதில் அணுகக்கூடியதாகவும் பதிலளிக்கக் கூடியதாகவும் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பை அவை மிக நன்கு உள்ளடக்கியிருக்க வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்