எண்ணிம ஊடகப் பரப்புரைக்கான குறிப்பிட நேர ஒதுக்கீட்டிற்கான அனுமதி வழங்கீட்டு முறை
July 23 , 2023 1082 days 519 0
இந்தியத் தேர்தல் ஆணையமானது, அரசுக்குச் சொந்தமான மின்னணு ஊடகங்களை அரசியல் கட்சிகள் அணுகுவதற்கான எண்ணிம ஊடகப் பரப்புரைக்கான குறிப்பிட்ட நேர ஒதுக்கீட்டிற்கான ஒரு புதிய அனுமதி வழங்கீட்டு முறையை அறிமுகப் படுத்தி உள்ளது.
இந்த வசதியின் மூலம், தேர்தல்களின் போது பல்வேறு அரசியல் கட்சிகள் நேர ஒதுக்கீடுகளுக்கான அனுமதியினைப் பெறுவதற்காக வேண்டி தேர்தல் ஆணைய அலுவலகங்களுக்கு என்று நேரடியாக தங்கள் பிரதிநிதிகளை அனுப்ப வேண்டிய அவசியமில்லை.
1998 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதியன்று அறிவிக்கப்பட்ட இந்த முறையானது, 1951 ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதிகள் சட்டத்தின் 39Aவது பிரிவின் கீழ் ஒரு சட்டப்பூர்வ அடித்தளத்தைக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு தேசியக் கட்சிக்கும் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சிக்கும் தூர்தர்சன் & அகில இந்திய வானொலி நிலையம் ஆகியவற்றில் ஒரே மாதிரியாகப் பரப்புரைச் செய்வதற்குச் சமமான நேரம் என்ற அடிப்படையில் நேரம் ஒதுக்கப்படுகிறது.