எண்ணிம வழிக் கற்றலுக்கான சர்வதேச தினம் - மார்ச் 19
March 25 , 2024 498 days 318 0
யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினர் நாடுகளால் 2024 ஆம் ஆண்டில் இருந்து முதல் முறையாக இந்த நாள் கொண்டாடப் பட்டது.
கல்வி சார்ந்தச் சவால்களை நன்கு எதிர்கொள்வதிலும், நிலையான மேம்பாட்டினை ஊக்குவிப்பதிலும் எண்ணிம வழிக் கற்றலின் மதிப்பை இது அங்கீகரிக்கிறது.
2005 ஆம் ஆண்டில், உலக மக்கள்தொகையில் வெறும் 16% பேர் இணைய வசதியினை பெற்றிருந்தனர்.
2023 ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 67% ஆக உயர்ந்துள்ளது.
40% ஆரம்பப் பள்ளிகள் மட்டுமே இணையச் சேவைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் உள்ள கிராமப்புற மக்களில் 70% பேர் மின்சாரம் வசதி பெறாமல் உள்ளனர்.