ரிலையன்ஸ் ஜியோ மற்றும் GSMA ஆகியவை தங்களது எண்ணிமத் திறன்கள் திட்டத்தினைத் தேசிய அளவில் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளன.
இது மாபெரும் GSMA உடன் இணைக்கப்பட்ட மகளிர் ஈடுபாட்டு முன்னெடுப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு கூட்டு முயற்சியாகும்.
எண்ணிமப் பயன்பாட்டிற்கான அணுகலைத் திறன்மிக்க வகையில் பயன்படுத்த உதவும் வகையில், கிராமப்புற பெண்கள் மற்றும் விளிம்புநிலை/குறைந்த வருமானம் கொண்ட குழுக்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கு, அதன் தேவை அடிப்படையிலானப் பயிற்சியை வழங்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
GSMA அமைப்பின் 2022 ஆம் ஆண்டு கைபேசி பயன்பாடு சார்ந்த பாலின இடைவெளி அறிக்கையின் படி, இந்தியாவில் கைபேசி சார்ந்த இணையத்தினைப் பயன்படுத்தச் செய்வதில் ஆண்களை விட பெண்கள் 41% குறைவாகவே உள்ளனர்.
இந்தியாவில் 248 மில்லியன் ஆண்கள் கைபேசி சார்ந்த இணையத்தைப் பயன் படுத்துகின்ற அதே சமயம் மொத்தம் 330 மில்லியன் பெண்கள் இன்னும் கைபேசி சார்ந்த இணையத்தைப் பயன்படுத்துவதில்லை.