TNPSC Thervupettagam

எண்ணிமப் பண வழங்கீட்டு புலனாய்வு தளம் (DPIP)

June 27 , 2025 7 days 42 0
  • முக்கியமான இந்திய வங்கிகள் ஆனது, எண்ணிமப் பண வழங்கீட்டு கண்காணிப்பு/ புலனாய்வுத் தளத்தினை (DPIP) உருவாக்குவதற்காக என்று இந்திய ரிசர்வ் வங்கியுடன் இணைந்து செயல்படுகின்றன.
  • நிகழ்நேரப் புலனாய்வுப் பகிர்வு மூலம் எண்ணிமப் பண வழங்கீட்டு மோசடிகளைக் குறைப்பதே இதன் குறிக்கோள் ஆகும்.
  • பாதுகாப்பானப் பரிவர்த்தனைகளுக்கான எண்ணிமப் பொது உள்கட்டமைப்பாக DPIP செயல்படும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையம் (RBIH) ஆனது, 5 முதல் 10 வங்கிகளுடன் இணைந்து இதற்கான முன்மாதிரியை உருவாக்கி வருகிறது.
  • மோசடியைக் கண்டறிந்து தடுக்க என்று இந்தத் தளம் செயற்கை நுண்ணறிவு மற்றும் பகுப்பாய்வு போன்ற மேம்படுத்த்தப் பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும்.
  • 2025 ஆம் நிதியாண்டில், வங்கி மோசடிகளில் சிக்கிய மொத்தத் தொகை 36,014 கோடி ரூபாயாக உயர்ந்தது என்ற நிலையில் இது 2024 ஆம் நிதியாண்டில் பதிவான 12,230 கோடி ரூபாயை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்