எண்ணிமப் பணப் பரிவர்த்தனையில் முன்னணி நகரங்கள் 2022
April 24 , 2023 1063 days 506 0
2022 ஆம் ஆண்டில் எண்ணிமப் பணப் பரிவர்த்தனையில் நாட்டிலேயே 5வது முன்னணி நகரமாக சென்னை மாறியுள்ளது.
பண வழங்கீட்டுச் சேவை நிறுவனமான வேர்ல்ட் லைன் இந்தியா இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
சென்னையில், 35.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற மொத்த மதிப்புடன் 14.3 மில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
65 பில்லியன் டாலர் மதிப்புள்ள 29 மில்லியன் பரிவர்த்தனைகளுடன் இதில் பெங்களூரு முதலிடத்தில் உள்ளது.
அதைத் தொடர்ந்து புது டெல்லி, மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்கள் இடம் பெற்று உள்ளன.
2022 ஆம் ஆண்டில், நாடு முழுவதும், அடிக்கடி வருகை தந்த நேரடி வணிகப் பிரிவுகளின் மொத்த அளவின் அடிப்படையில் 43 சதவீதத்திற்கு அதிகமாகவும், மொத்த மதிப்பின் அடிப்படையில் 40 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தன.
இணைய வர்த்தகம், விளையாட்டு, பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் நிதிச் சேவைகள் 85 சதவீதத்திற்கும் மேலானப் பரிவர்த்தனைகளுடன், மொத்த மதிப்பின் அடிப்படையில் 25 சதவீதத்திற்கும் மேலாகப் பங்களித்தன.
கல்வி, பயணம் மற்றும் விருந்தோம்பல் துறையானது மொத்த அளவில் 15 சதவீதமும் மற்றும் மதிப்பின் அடிப்படையில் 75 சதவீதமும் பங்களித்துள்ளன.