சர்வதேச எரிசக்தி முகமை (IEA) எண்ணெய் 2025 அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
2024 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய எண்ணெய்த் தேவை என்பது ஒரு நாளைக்கு சுமார் 2.5 மில்லியன் பீப்பாய்கள் (mb/d) அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், உலகளாவிய எண்ணெய் உற்பத்தி திறன் ஆனது, 2030 ஆம் ஆண்டில் 5 mb/d அளவிற்கும் அதிகமாக அதிகரித்து சுமார் 114.7 mb/d என்ற ஒரு அளவினை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் எண்ணெய்த் தேவையானது, கணிப்புக் காலத்தில் 1 mb/d என்ற அளவில் கடுமையாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 மற்றும் 2030 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் உலகளாவிய உயிரி எரிபொருள் உற்பத்தி 680 kb/d அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளின் எத்தனால் உற்பத்தி வளர்ச்சியானது, முறையே 140 kb/d மற்றும் 100 kb/d அதிகரித்து, மிகவும் முன்னணியில் இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.