இந்திய உணவுக் கழகம் (FCI - Food Corporation of India) மற்றும் இந்திய தேசிய வேளாண் மற்றும் கூட்டுறவுச் சந்தை (NAFED - National Agricultural Cooperative Marketing of India) ஆகியவை விவசாயிகளிடமிருந்து எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்புகள் ஆகியவற்றை நேரடியாகக் கொள்முதல் செய்கின்றன.
தற்பொழுது, ராபி காலப் பயிரினங்களுக்கான விலை ஆதரவுத் திட்டமானது ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தொடங்கப் பட்டுள்ளது.
NAFED என்பது நாட்டில் உள்ள வேளாண் விளைபொருட்களின் அனைத்துக் கூட்டுறவுச் சந்தையிடல் அமைப்புகளுக்கான ஒரு தலைமை அமைப்பாகும்.
NAFED ஆனது வேளாண் விளை பொருட்களைத் தவிர, வனத்தில் விளைந்த பொருட்களையும் கொள்முதல் செய்கின்றது.
இது “பசுமை நடவடிக்கை” (Operation Greens) என்பதின் கீழ் நாட்டில் விலை நிலைத் தன்மைக்கு ஒப்புதல் அளிக்கும் ஒரு தலைமை நிறுவனமாக ஏற்படுத்தப் பட்டு உள்ளது.
“Operation Greens” ஆனது 2018-19 ஆம் ஆண்டின் நிதிநிலை அறிக்கையில் அறிமுகப் படுத்தப் பட்டது.
இந்தத் திட்டமானது நாட்டில் தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விநியோகத்தைச் சமநிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு உள்ளது.