TNPSC Thervupettagam

எண்ணெய் வித்துக்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை

September 28 , 2021 1327 days 566 0
  • எண்ணெய் வித்துக்கள் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக ராபி பருவப் பயிர்களுக்கு மிக அதிக குறைந்தபட்ச ஆதார விலையினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்தோனேசியா, மலேசியா, அர்ஜென்டினா முதலிய முக்கிய சமையல் எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஏற்பட்ட தொழிலாளர்ப் பற்றாக்குறை மற்றும் பயிர்ச் சேதம் போன்றவற்றின் காரணமாக சமையல் எண்ணெய்களின் விலை 50% உயர்ந்துள்ளது.
  • எனவே எண்ணெய் வித்துக்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலையை அதிகரிக்கச் செய்வதன் மூலம்,
    • உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் எண்ணெய்களை இந்தியா சார்ந்திருக்கும் நிலையைக் குறைக்கவும்,
    • உலகளாவிய காரணிகளால் ஏற்படும் விலை உயர்விலிருந்து இந்திய நாட்டின் நுகர்வோரைப் பாதுகாக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்