TNPSC Thervupettagam

எதிர்காலத் தலைமுறையினருக்கான புகையிலைத் தடை - இங்கிலாந்து

April 25 , 2026 11 hrs 0 min 24 0
  • 2009 ஆம் ஆண்டு ஜனவரி 1 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் சட்டப் பூர்வமாகப் புகையிலை வாங்குவதைத் தடைசெய்யும் புகையிலை மற்றும் வேப்ஸ் / மின்-சிகரெட்டுகள் சட்டத்தை இங்கிலாந்து (UK) நிறைவேற்றியுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் சட்டக் கட்டுப்பாட்டைப் படிப்படியாக அதிகரிப்பதன் மூலம் "புகை இல்லாத தலைமுறையை" உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இங்கிலாந்தில் புகைப் பிடிப்பதால் ஆண்டுதோறும் சுமார் 64,000 இறப்புகள் ஏற்படுவதோடு இது தேசிய சுகாதார சேவைக்கு (NHS) பெரும் சுமையை ஏற்படுத்துகிறது.
  • பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற பொது இடங்களில் புகைப் பிடிப்பதற்கான தடையை விரிவுபடுத்துவதுடன், வேப்பிங்/மின்-சிகரெட் புகைத்தல் மீதான விதிகளையும் இச்சட்டம் கடுமையாக்குகிறது.
  • இந்த மசோதா அரச ஒப்புதல் பெற்ற பிறகு சட்டமாக மாறும், இதன்மூலம் உலகளவில் மிகவும் கடுமையான புகையிலை எதிர்ப்புச் சட்டங்களில் ஒன்றாக இது அமையும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்