TNPSC Thervupettagam

எதிர்காலத்திற்கான திறன்கள் குறித்த அறிக்கை

July 2 , 2025 13 hrs 0 min 28 0
  • போட்டித் தன்மைக்கான நிறுவனமானது (IFC) இந்த அறிக்கையினைத் தயரித்துள்ளது.
  • இந்த அறிக்கையானது, இந்தியாவின் திறன் சார் கட்டமைப்பினை மதிப்பிடுவதற்காக 2023–24 வருடாந்திர தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS) மீதான தரவுகளைப் பயன்படுத்துகிறது.
  • இந்தியாவின் பணியாளர் வளத்தில் 88% பேர் குறைந்த திறன் கொண்ட வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
  • பணியாளர் வளத்தில் சுமார் 10–12% பணியாளர்கள் மட்டுமே உயர் திறன் கொண்ட பணிகளில் உள்ளனர்.
  • இந்தியாவில் சுமார் 66 சதவீதத்திற்கும் அதிகமான தொழிற்கல்விப் பயிற்சியை ஐந்து துறைகள் கொண்டுள்ளன.
  • அடையாளம் காணப்பட்ட இந்த முக்கியத் துறைகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள் (IT மற்றும் ITeS), ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை, மின்னணுவியல், சுகாதாரம் மற்றும் வாழ்க்கை அறிவியல், மற்றும் அழகு மற்றும் நல்வாழ்வு ஆகியவை அடங்கும்.
  • இந்த அறிக்கைக்கான தரவு
    • வருடாந்திரத் தொழிலாளர் வளக் கணக்கெடுப்பு (PLFS),
    • பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா 4.0 (PMKVY 4.0),
    • துறை சார் திறன் சபைகள் (SSC) மற்றும்
    • தேசியப் பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) முகப்புப் பக்கங்கள் ஆகியவற்றில் இருந்து பெறப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்