எதிர்பாராத தொற்றுநோய் தயார்நிலை மற்றும் வர்த்தக தாக்கம்
January 21 , 2019 2483 days 904 0
உலகப் பொருளாதார மன்றமானது (WEF – World Economic Forum) சமீபத்தில் எதிர்பாராத தொற்றுநோய் தயார்நிலை மற்றும் வர்த்தக தாக்கம் என்ற அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையின் மீதான வெள்ளை அறிக்கையானது உலகளாவிய ஹார்வர்டு சுகாதார நிறுவனத்துடன் இணைந்து WEF-ஆல் வெளியிடப்பட்டது.
இந்த வெள்ளை அறிக்கையின் விவரங்களானது சமுதாயத்தின் மீது தொற்று நோய்களின் தாக்கம் மற்றும் அச்சுறுத்தலை மேலாண்மை செய்ய வர்த்தக சமூகமானது ஏன் மற்றும் எப்படிப்பட்ட பங்களிப்புகளை அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளது.
முக்கியமான கண்டுபிடிப்புகளாவன
கடந்த 30 ஆண்டுகளில் தொற்று நோய்களின் எண்ணிக்கை மற்றும் அதன் வகைகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன.
2011 ஆம் ஆண்டிலிருந்து உலகம் முழுவதும் ஆண்டுதோறும் 200 தொற்றுநோய் நிகழ்வுகள் காணப்படுகின்றன.
உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 0.7% ($ 570 பில்லியன்) அளவிற்கு வருடாந்திரப் பொருளாதார இழப்புகளுக்கு இந்த தொற்று நோய்கள் காரணமாகின்றன.
இது வரும் பத்தாண்டு காலங்களில் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல் மதிப்பீட்டிற்கு நிகரானது ஆகும்.