எதிர்பாராத விதமான சூழல்களால் எளிதில் ஏற்படக் கூடிய சேதத்திற்கான இழப்பீட்டு விதி
May 6 , 2024 466 days 372 0
‘எதிர்பாராத விதமான சூழல்களால் எளிதில் ஏற்படக் கூடிய சேதத்திற்கான இழப்பீட்டு விதி - முட்டை ஓடு போன்ற மண்டை ஓடு’ என்ற சட்டக் கோட்பாடு தவறாகப் பயன்படுத்தப் பட்டதைக் கண்டறிந்து, மருத்துவம் சார்ந்த அலட்சியச் செயல்பாடு வழக்கில் மாவட்ட நுகர்வோர் மன்றம் வழங்கிய 5 லட்ச ரூபாய் இழப்பீட்டை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
எதிர்பாராத விதமான சூழல்களால் எளிதில் ஏற்படக் கூடிய சேதத்திற்கான இழப்பீடு விதி என்பது உரிமையியல் வழக்குகளில் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சட்டக் கொள்கையாகும்.
அடிப்படையில், காயமடைந்த நபரின் தனிப்பட்ட உடல் நிலைமைகள் மற்றும் அதனைத் தீவிரமடைய செய்யக்கூடிய அனைத்துச் செயல்களுக்கும் அதன் காயங்களுக்கும் அறிந்தே செய்யப்படவில்லை என்றாலும் அதற்குக் குற்றவாளியே பொறுப்பாவார்.
எளிமையாகச் சொன்னால், பாதிக்கப்பட்டவருக்கு குறிப்பாக மென்மையான மண்டை ஓடு அல்லது ‘முட்டை ஓடு’ போன்ற மண்டை ஓடு இருந்தாலும், ஒரு நபரின் தலையில் அடிக்கும் போது ஏற்படும் காயங்களுக்கு பிரதிவாதியே பொறுப்பேற்க வேண்டும்.