TNPSC Thervupettagam

எத்திலீன் ஆக்சைடு கலப்பு

April 27 , 2024 20 days 73 0
  • MDH மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்தியத் தயாரிப்பு நிறுவனங்கள் ஏற்றுமதி செய்யும் சில மசாலாப் பொருட்களுக்கு சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் தடை விதித்துள்ளன.
  • இந்த இரு நிறுவனங்களால் ஏற்றுமதி செய்யப்படும் சில மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்சைடு (ETO) இருப்பதாக அந்நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.
  • சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்கான மசாலா ஏற்றுமதியில் ETO கலப்படம் இருப்பது குறித்து ஆய்வு செய்வதற்கான கட்டாய சோதனையை அரசு மேற்கொள்ளும் என்று இந்திய அரசாங்கம் கூறியுள்ளது.
  • ETO என்பது புற்றுநோயினை ஏற்படுத்தக் கூடிய ஒரு பூச்சிக்கொல்லி என வகைப் படுத்தப் பட்டுள்ளது.
  • எத்திலீன் ஆக்சைடு என்பது C2H4O வேதியியல் சூத்திரம் கொண்ட ஒரு இரசாயன கலவை ஆகும்.
  • இது அறை வெப்பநிலையில் ஒரு மணமிக்க வாசனையுடன் எளிதில் தீப்பற்றக் கூடிய நிறமற்ற வாயுவாகும்.
  • டிஎன்ஏ மூலக்கூறினைச் சேதப்படுத்தும் திறன் கொண்டதால் இது ஒரு பயனுள்ளத் தொற்று நீக்க காரணியாக உள்ளது.
  • லிம்போமா, லுகேமியா மற்றும் மார்பக புற்றுநோய் ஆகியவை எத்திலீன் ஆக்சைடின்  வெளிப்பாட்டிற்கு உட்படுவதால் ஏற்படும் புற்றுநோய் வகைகள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்