TNPSC Thervupettagam

எத்திலீன் கிளைகோல் பிரச்சினை

January 19 , 2026 2 days 57 0
  • தமிழ்நாட்டின் மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் ஆனது ஒரு குறிப்பிட்ட தொகுதி ஆல்மாண்ட்-கிட் சிரப்பை/மருந்தினை வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் உட்கொள்வதற்கு எதிராக பொது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • எத்திலீன் கிளைக்கோல் என்ற நச்சுப் பொருளுடன் கலப்படம் செய்யப்பட்டதாக ஆய்வக அறிக்கைகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.
  • எத்திலீன் கிளைகோல் ஒரு நிறமற்ற, மணமற்ற மற்றும் ஆவியாகாத திரவமாகும்.
  • நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் மரணம் உள்ளிட்ட கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதால், எத்திலீன் கிளைகோலுடன் கலப்படம் செய்வது மிகவும் ஆபத்தானது.
  • இது குறைந்த உறை திறன் மற்றும் அதிக கொதிநிலையைக் கொண்டுள்ளது மற்றும் உறைதல் தடுப்பு மற்றும் பனி நீக்கல் கரைசல்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மூலப்பொருளாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்