TNPSC Thervupettagam

என்வின்டாட்ஸ் இந்தியா 2020 அறிக்கை

August 11 , 2020 1836 days 732 0
  • சமீபத்தில் தேசியப் புள்ளியியல் அலுவலகமானது என்விஸ்டாட்ஸ் இந்தியா – 2020 என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கையானது 2019 ஆம் ஆண்டில் அனல் காற்று நாட்களின் எண்ணிக்கையானது 80%ற்கும் மேல் அதிகரித்துள்ளதாக கூறுகின்றது.
  • இந்த அறிக்கையானது மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்டச் செயல்படுத்துதல் துறை அமைச்சகத்தினால் தயாரிக்கப் பட்டுள்ளது.

சில முக்கியமான அம்சங்கள்

  • அதிக எண்ணிக்கையிலான அனல் காற்று நாட்கள் இராஜஸ்தானில் பதிவாகி உள்ளன. இதற்கு அடுத்து உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான அனல் காற்று நாட்கள் பதிவாகியுள்ளன.
  • 2018 ஆம் ஆண்டில் கடுமையான ஏற்பட்ட சுவாச நோய்த் தொற்றினால் நிகழ்ந்த இறப்பானது கடந்த 6 ஆறு ஆண்டுகளில் அதிகமாக உள்ளது.
  • சுவாச நோய்த் தொற்றினால் ஏற்பட்ட அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் மேற்கு வங்கத்தில் பதிவாகியுள்ளன.
  • தில்லியானது நாட்டில் அதிக எண்ணிக்கையிலான பதிவு செய்யப்பட்ட மோட்டார் வாகனங்களைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து பெங்களூரு அதிக எண்ணிக்கையிலான இவ்வகை வாகனங்களைக் கொண்டுள்ளது.
  • ஆந்திரப் பிரதேச மாநிலமானது அதிக எண்ணிக்கையிலான குடிசை வாழ் மக்களைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகியவை அதிக எண்ணிக்கையிலான குடிசை வாழ் மக்களைக் கொண்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்