TNPSC Thervupettagam

எபோலா புண்டிபுகியோ பாதிப்பு - நைஜீரியா

October 23 , 2026 16 hrs 0 min 13 0
  • நைஜீரியாவானது வெளிநாட்டிலிருந்து வந்த நபருக்கு முதன்முறையாக எபோலா புண்டிபுகியோ வைரஸ் நோய் (BDBV) பாதிப்பைப் பதிவு செய்துள்ளது, இதன் மூலம் 2026 ஆம் ஆண்டு நோய்ப்பரவலில் BDBV ஐப் பதிவு செய்த ஐந்தாவது நாடாக இது மாறி உள்ளது.
  • எபோலா புண்டிபுகியோ வைரஸ் நோய் (BDBV) என்பது புண்டிபுகியோ வைரஸால் ஏற்படும் ஒரு கடுமையான நோயாகும், இது 2007 ஆம் ஆண்டில் உகாண்டாவில் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட எபோலா வைரஸ் இனத்தின் ஒரு வகை ஆகும்.
  • பாதிக்கப்பட்ட நபர் அல்லது விலங்கின் இரத்தம் அல்லது உடல் திரவங்களுடனான நேரடித் தொடர்பின் மூலம் இது முக்கியமாகப் பரவுகிறது, மேலும் காய்ச்சல், பலவீனம், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் இரத்தப்போக்கு ஆகியவற்றை ஏற்படுத்தும்.
  • உகாண்டாவின் புண்டிபுகியோ மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு நோய்ப்பரவலின் போது இந்த நோய் முதன்முதலில் கண்டறியப்பட்டது, இதன் காரணமாக இந்த வைரஸுக்கு இப்பெயர் வந்தது.
  • நைஜீரியாவிற்கு முன்பு, உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு (DRC), தெற்கு சூடான் மற்றும் கென்யாவில் BDBV பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்