TNPSC Thervupettagam

எம்.சி. மேத்தா Vs இந்திய ஒன்றியம் வழக்கு

March 20 , 2026 11 hrs 0 min 14 0
  • டெல்லி-NCR பகுதியில் காற்று மாசுபாடு தொடர்பான 40 ஆண்டுகள் பழமையான எம்.சி. மேத்தா Vs இந்திய ஒன்றியம் வழக்கை இந்திய உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
  • 1985 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் ஆர்வலர் எம்.சி. மேத்தாவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு சுற்றுச்சூழல் சட்டத்தில் ஒரு மைல்கல் பொதுநல வழக்காக அமைந்தது.
  • இந்த வழக்கை அடுத்து, டெல்லி போக்குவரத்தில் CNG பயன்பாடு மற்றும் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் போன்ற முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
  • தற்போதைய சிக்கல்களை இன்னும் திறம்பட கையாளுவதற்காக, நீதிமன்றம் இப்போது "தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) காற்று மாசுபாடு தொடர்பான பிரச்சனைகள்" என்ற தலைப்பில் தானாக முன்வந்து ஒரு வழக்கைத் தொடங்கி உள்ளது.
  • சிறந்த வழக்கு மேலாண்மைக்காக, நிலுவையில் உள்ள விண்ணப்பங்களைத் தனித் தனி நீதிப் பேராணை மனுக்களாக மாற்றவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
  • இந்த நடவடிக்கை, தேசிய தலைநகரப் பிராந்தியத்தில் நிலவும் காற்று மாசுபாடு தொடர்பான சிக்கல்களை விரைவாகவும், அதிக கவனத்துடனும் கையாளுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்