TNPSC Thervupettagam

எரிசக்தி தீவு அமைத்தல்

July 27 , 2021 1471 days 584 0
  • இந்திய அரசானது நாட்டின் பல்வேறு நகரங்களில் எரிசக்தி தீவு அமைப்புகளை உருவாக்க திட்டமிட்டு வருகிறது.
  • நாட்டின் மின்சார முறைமை மீதான தாக்குதல்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த மின்சார உள்கட்டமைப்பை பாதுகாப்பதற்காக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது.
  • இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்துள்ள பெங்களூரு மற்றும் ஜாம்நகர் ஆகியவையும் இதனுள் அடங்கும்.
  • ஏற்கனவே இத்தகைய அமைப்பு முறையைக் கொண்டுள்ள மும்பை மற்றும் புதுடெல்லி ஆகிய நகரங்கள் புனரமைக்கப்படும்.
  • இந்த எரிசக்தி தீவு அமைப்பானது உற்பத்தித் திறனையும், செயலிழப்பு ஏற்படும்போது பிரதான முறைமையிலிருந்து தாமாகவே விடுபடும் அம்சமும் கொண்டதாக இருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்