TNPSC Thervupettagam

எரிபொருள் அல்லாத சில்லறை விற்பனைக் கூடம்

February 4 , 2022 1230 days 504 0
  • இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகமானது HappyShop என்ற பெயரில் தனது சில்லறை விற்பனைக் கூடத்தினைத் திறந்து வைத்ததன் மூலம், எரிபொருள் அல்லாத சில்லறை விற்பனைத் துறையில் கால்பதித்துள்ளது.
  • இதன் முதல் சில்லறை  விற்பனைக் கூடமானது மும்பையின் நேபியன் கடற்கரைச்  சாலையில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • இந்துஸ்தான் பெட்ரோலியக் கழக நிறுவனமானது ‘Happyshop’ விற்பனைக் கூடத்தின் மேலும் 2 கிளைகளைத் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
  • இந்த இரு கூடங்களும் பின்வரும் இடங்களில் அமைந்துள்ளன.
    • மும்பையின் மேற்கு பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் வாகனப் பராமரிப்பு மையம் மற்றும்
    • விசாகப்பட்டினத்திலுள்ள மில்லினியம் சில்லறைக் கூடம்
  • இது தவிர இந்துஸ்தான் நிறுவனமானது மதுரையில் இணைய வழியிலான விற்பனை நிலையத்தைத் திறந்து, முற்றிலும் இணைய வடிவிலான இயங்குதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள தனது விற்பனை நிலையங்களில் ‘Paani@clubHP’ என்ற பெயரில் தண்ணீர் குடுவைகளையும் (பாட்டில்) விற்பனை செய்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்