மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, ஹைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட ஒரு மேம்பட்ட எரிபொருள் கலன் பொருத்திய மின்சார வாகனத்திற்கான ஒரு மாதிரித் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும், அவர் டயோட்டா மிராய் எரிபொருள் கலன் பொருத்தப் பட்ட ஒரு மின்சார வாகனத்திற்கான செயல் விளக்கத்தினையும் வெளியிட உள்ளார்.
இத்திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படும் இது போன்ற முதல் வகைத் திட்டமாகும்.
இது ஹைட்ரஜன், எரிபொருள் கலன் பொருத்திய மின்சார வாகனத் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதையும், நாட்டில் ஹைட்ரஜன் அடிப்படையிலான ஆற்றலைப் பயன்படுத்தும் சமுதாயத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் அதன் நன்மைகளைப் பரப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.