எரிமலை வெடிப்பிற்குக் காரணமாகும் கார்பன் டை ஆக்சைடு
August 19 , 2023 885 days 512 0
ஒரு புதிய ஆய்வானது, எரிமலைகள் வெடிப்பதற்குப் பின்னணியில் உள்ள காரணங்கள் பற்றிய புரிதலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாறைக் குழம்பு (பாசால்டிக்) எரிமலைகள் வெடிப்பதைத் தூண்டும் காரணிகள் நீராவி அல்ல, அது கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயுதான் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறி உள்ளனர்.
உலகிலேயே அதிகளவுச் செயலில் உள்ள கடல்தீவு எரிமலைகளில் ஒன்றான பிகோ டோ ஃபோகோ எரிமலையின் எரிமலைக் குழம்பினை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
கண்ட மேலோட்டிற்குக் கீழே 12 முதல் 19 மைல் ஆழத்தில் உருவாகும் அதிகபட்ச அளவிலான கார்பன் டை ஆக்சைடு வாயு இருப்பினை அவர்கள் கண்டறிந்தனர்.
மூடகத்தில் இரும்பு மற்றும் இரும்பு ஆக்சைடுகள் அதிக அளவில் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
இந்தப் பகுதியானது புவிக்கு கீழே மற்றும் மூடகத்தில் உள்ளது.