2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1,200க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களின் திரள், சாண்டோரினி தீவுக்கும் அதன் அருகமைந்த கிரேக்கத்தில் அமைந்துள்ள கொலம்போ நிலத்தடி எரிமலைக்கும் இடையில் பகிரப்பட்ட பாறைக் குழம்பு மூலத்தினை நன்கு வெளிப்படுத்தி உள்ளது.
நில அதிர்வு மற்றும் புவியிடங்காட்டி தரவு ஆனது, இரண்டு எரிமலைகளும் மேற்பரப்பு தளர்வினை எதிர் கொண்டதாகக் காட்டியது.
இது கிரேக்கத்தில் உள்ள ஏஜியன் எரிமலை வளைவின் கீழ் உள்ள ஆழமானத் தேக்கத்திலிருந்து பாறைக் குழம்பு நகர்ந்து, இரு அமைப்புகளுக்கும் உள்ளீட்டினை வழங்கியதைக் குறிக்கிறது.
சாண்டோரினி 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் புடைக்கத் தொடங்கியது என்பதோடு இது பாறைக் குழம்பின் குவிப்பைக் குறிக்கிறது என்ற நிலையில் அதைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நில நடுக்க நடவடிக்கை நகர்ந்தது.
இரண்டு எரிமலைகளுக்கும் இடையிலான முதல் உறுதிப்படுத்தப்பட்ட பாறைக் குழம்பின் தொடர்பு இதுவாகும்.