நான்கு தொழில் துறைகளுக்கான முதல் பசுமை இல்ல வாயு உமிழ்வு செறிவு இலக்கு விதிகள் அறிவிக்கப்பட்டன.
அரசாங்கமானது, சட்டப்பூர்வ பிணைப்பு சார்ந்த 2025 ஆம் ஆண்டு பசுமை இல்ல வாயு உமிழ்வுச் செறிவு (GEI) இலக்கு விதிகளை அறிவித்தது.
இந்த விதிகள் ஆனது சிமெண்ட், அலுமினியம், குளோர்-காரம், கூழ் மற்றும் காகிதத் துறைகளில் 282 அதிக உமிழ்வு அலகுகளுக்குப் பொருந்தும்.
உமிழ்வுச் செறிவு ஆனது ஓர் உற்பத்தி அலகில் எவ்வளவு டன்கள் அளவிலான கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு என்ற அளவில் அளவிடப்படுகிறது.
இலக்குகளைப் பூர்த்தி செய்யும் தொழில் துறைகள் கார்பன் மதிப்புகளைப் பெறுகின்றன; பூர்த்தி செய்யத் தவறியவை மதிப்புகளை வாங்க வேண்டும் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும்.
உமிழ்வைக் குறைப்பதன் மூலம் பாரீஸ் உடன்படிக்கையின் கீழ் இந்தியாவின் பருவநிலை உறுதிப்பாடுகளை ஆதரிப்பதை இந்த விதிகள் நோக்கமாகக் கொண்டு உள்ளன.