TNPSC Thervupettagam

எறிகணைத் தடுப்பு அமைப்பு சோதனை

June 16 , 2026 13 hrs 0 min 24 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமானது (DRDO), உந்துவிசை எறிகணைத் தடுப்பு (BMD) இடைமறிப்பு எறிகணைகள் மற்றும் நடுத்தரத் தூர கடற்படை கப்பல் எதிர்ப்பு எறிகணையின் (NASM-MR) முதல் சோதனை உட்பட மூன்று ஏவுகணைச் சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது.
  • உந்துவிசை எறிகணைத் தடுப்பு (BMD) அமைப்பு என்பது உள்வரும் உந்துவிசை எறிகணைகளைக் கண்டறிந்து, கண்காணித்து, அழிக்கும் பல அடுக்குக் கவசமாகும்.
  • இந்த இடைமறிப்பு எறிகணைகள் 2,000 கி.மீ முதல் 5,000 கி.மீ வரை தாக்கும் திறன் கொண்ட இடைப்பட்ட தூர உந்துவிசை எறிகணைகளை (IRBMs) செயலிழக்கச் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • BMD அமைப்பானது பூமியின் வளிமண்டலத்திற்கு வெளியேயும் வளிமண்டலத்திற்கு உள்ளேயும் எறிகணைகளை இடைமறித்து அழிக்கக்கூடியது.
  • நடுத்தரத் தூரக் கடற்படை கப்பல் எதிர்ப்பு எறிகணை (NASM-MR) என்பது எதிரிகளின் மேற்பரப்புக் கடற்படை இலக்குகளைத் தாக்குவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு உள் நாட்டு எறிகணையாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்