எறும்புத் தின்னி கடத்தல் மோசடிக்கான சிறப்புப் பணிக் குழு
July 25 , 2018 2629 days 937 0
‘அருகிவரும் உயிரினமான’ எறும்புத் தின்னி கடத்தல் மோசடியைத் தடுக்க ஒடிசா சிறப்புப் பணிக் குழு சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்துள்ளது. பெரும்பாலான சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுவதில் பாலூட்டியான எறும்புத் தின்னியும் ஒன்று.
இந்த கிரகத்தில் செதில்களை உடைய பாலூட்டி எறும்புத் தின்னி மட்டுமே.
உலகம் முழுவதும் 8 வகை இனங்களைக் கொண்டுள்ளது எறும்புத் தின்னி. இந்தியாவில் இரண்டு வகை இனங்கள் மட்டுமே காணப்படுகின்றன.
அவையாவன
பெரும்பாலும் வடகிழக்கு மாநிலங்களில் காணப்படும் சீனாவின் எறும்புத் தின்னி (மணிஸ் பெண்டடாசிட்யாலா)
இந்திய எறும்புத் தின்னி (மணிஸ் கிரஸிகவ்டேட்டா)
ஐக்கிய நாடுகளுடன் இணைக்கப்பட்ட பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN - International Union for Conservation of Nature) சிவப்புப் பட்டியல் படி ‘உயர் அச்சுறுத்தல்’ நிலையில் உள்ள பாலூட்டியாக ‘சீனாவின் எறும்புத் தின்னி’ பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்திய எறும்புத் தின்னி ‘அருகி வரும்’ உயிரினமாக IUCN-ன் சிவப்புப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ளது.
இது வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் படி அட்டவணை 1ல் வகைப்படுத்தப்பட்டு பாதுகாக்கப்படும் விலங்காகும்.