TNPSC Thervupettagam
September 21 , 2026 15 hrs 0 min 30 0
  • வானியலாளர்கள் 1 மில்லியன் ஆண்டுகளுக்கும் குறைவான வயதுடைய, அறியப் பட்ட மிக இளம் கிரகமாக எலியாஸ் 2-24 b (Elias 2-24 b) என்பதை உறுதிப்படுத்தி உள்ளனர்.
  • பூமியிலிருந்து சுமார் 450 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள எலியாஸ் 2-24 என்ற நட்சத்திரத்தை இது சுற்றி வருகிறது, மேலும் வியாழனைப் போன்ற நிறை கொண்டது.
  • இந்த கிரகம் அதன் புரோட்டோபிளானட்டரி வட்டின் இடைவெளியில் அமைந்துள்ளது மற்றும் அதிலிருந்து பொருட்களை தொடர்ந்து சேகரித்து வருகிறது.
  • W. M. கெக் ஆய்வகம், அட்டகாமா லார்ஜ் மில்லிமீட்டர்/சப்மில்லிமீட்டர் அரே (ALMA) மற்றும் வெரி லார்ஜ் டெலஸ்கோப் (VLT) ஆகியவற்றின் அவதானிப்புகளைப் பயன்படுத்தி இது உறுதிப்படுத்தப்பட்டது.
  • இது பின்னர் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு, 2017 ஆம் ஆண்டில் ஒரு வட்டு இடைவெளியிலிருந்து முதன்முதலில் ஊகிக்கப்பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்