TNPSC Thervupettagam

எல்-ஃபாஷர் நகரத்தின் இனப்படுகொலை விவகாரம்

February 24 , 2026 2 days 50 0
  • சூடானின் வடக்கு டார்பூரில் உள்ள எல்-ஃபாஷர் நகரத்தை முற்றுகையும் கைப்பற்றலும், ஐக்கிய நாடுகள் சபையால் அமைக்கப்பட்ட சுயாதீனமான உண்மைக் கண்டறியும் குழுவின் விசாரணையைத் தொடர்ந்து "இனப்படுகொலையின் அடையாளங்களை" கொண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • சூடானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரின் போது துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளால் (RSF) எல்-ஃபாஷர் 18 மாத முற்றுகையின் கீழ் இருந்தது என்பதோடு மேலும் 2025 அக்டோபர் மாத இறுதியில் நகரம் RSF வசம் வீழ்ந்தது.
  • முற்றுகையின் போதும் அதற்குப் பின்னரும் இன ரீதியாக இலக்கு வைக்கப்பட்ட கொலைகள், பாலியல் வன்முறை மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பு அழிப்பை ஐ.நா. அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.
  • ஜகாவா மற்றும் ஃபர் சமூகங்கள் போன்ற அரபு அல்லாத இனக் குழுக்களை குறி வைத்ததாக RSF மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
  • ஐ.நா.வின் கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து எல்-ஃபாஷரை முற்றுகையிட்டு கைப்பற்றியது தொடர்பான அட்டூழியங்களில் ஈடுபட்டதற்காக மூன்று RSF தளபதிகளை அமெரிக்கா தடை செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்