அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் எல் நினோ காரணமாக $11 டிரில்லியன் உலகளாவிய வருமான இழப்பு ஏற்படக்கூடும் என்று COP31 மாநாட்டில் சர்வதேச வேளாண் மேம்பாட்டு நிதியம் (IFAD) வெளியிட்ட அறிக்கை எச்சரித்துள்ளது.
2026–27 எல் நினோ ஆனது 2026 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை உச்சத்தை அடையக்கூடும்; இது வேளாண்மை மற்றும் கிராமப்புற வாழ்வாதாரங்களை அச்சுறுத்துகிறது.
தென் ஆப்பிரிக்கா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நெல் உற்பத்தி செய்யும் பகுதிகள் அதிகரித்த வேளாண் வறட்சி அபாயங்களை எதிர்கொள்கின்றன.
உலக உணவுத் திட்டத்தின் (WFP) மதிப்பீடுகளின்படி, 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கூடுதலாக 4.9 கோடி (49 மில்லியன்) மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொள்ளக்கூடும்.
நிதி நடவடிக்கைகளை மட்டும் மேற்கொள்வதன் மூலம் ஏற்படும் 9.8% இழப்புக் குறைப்புடன் ஒப்பிடுகையில், வேளாண் இடுபொருள் ஆதரவு, சந்தை அணுகல் மற்றும் நிதி ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் விவசாயிகளின் வருமான இழப்பை 18.7% வரை குறைக்க முடியும்.