பாகிஸ்தான் மற்றும் வங்காள தேசத்துடன் மற்றும் பிற நாடுகளுடனான தனது எல்லைகளை மேலும் வலுப்படுத்த உதவும் செயற்கைக்கோளை இஸ்ரோவானது உள்துறை அமைச்சகத்திற்கென பிரத்தியேகமாக செலுத்த உள்ளது.
இந்த நடவடிக்கையானது எல்லை மேலாண்மையை மேம்படுத்துவதில் விண்வெளித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது மீதான பணிக்குழுவின் பரிந்துரைகளின் ஒரு பகுதியாகும்.
எல்லை மேலாண்மையை மேம்படுத்துவதில் விண்வெளித் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு உகந்த பகுதிகளாக அடையாளம் காண்பதற்காக பணிக்குழுவால் தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தப் பணிக்குழுவானது எல்லை மேலாண்மையின் இணை செயலாளரை தலைவராகவும், BSF, விண்வெளித்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் எல்லை மேலாண்மை பிரிவின் உறுப்பினர்களையும் உள்ளடக்கியது.