TNPSC Thervupettagam

எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கை

January 1 , 2026 2 days 46 0
  • மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சுட்டியைச் சேர்ந்த 19 வயது புலம்பெயர்ந்த தொழிலாளி ஜுயல் ராணா, ஒடிசாவின் சம்பல்பூரில் கொல்லப்பட்டார்.
  • இந்தக் குற்றம் வேறொரு மாநிலத்தில் நடந்திருந்தாலும், மேற்கு வங்காளக் காவல் துறை சுட்டி காவல் நிலையத்தில் எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
  • குற்றம் நடந்த இடத்தைப் பொருட்படுத்தாமல், எந்த காவல் நிலையத்திலும் FIR பதிவு செய்ய எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கை அனுமதிக்கிறது என்பதோடு மேலும் இதற்கு முதலில் "0" என்ற வரிசை எண் வழங்கப்படுகிறது.
  • இதில் பதிவு செய்த பிறகு, எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கை ஆனது ஒடிசாவில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மேலும் விசாரணைக்காக மாற்றப் படுகிறது.
  • இந்த ஏற்பாடு விரைவான காவல் நடவடிக்கைக்கு உதவுவதோடு, அதிகார வரம்புகள் காரணமாக ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்