மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள சுட்டியைச் சேர்ந்த 19 வயது புலம்பெயர்ந்த தொழிலாளி ஜுயல் ராணா, ஒடிசாவின் சம்பல்பூரில் கொல்லப்பட்டார்.
இந்தக் குற்றம் வேறொரு மாநிலத்தில் நடந்திருந்தாலும், மேற்கு வங்காளக் காவல் துறை சுட்டி காவல் நிலையத்தில் எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.
குற்றம் நடந்த இடத்தைப் பொருட்படுத்தாமல், எந்த காவல் நிலையத்திலும் FIR பதிவு செய்ய எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கை அனுமதிக்கிறது என்பதோடுமேலும் இதற்கு முதலில் "0" என்ற வரிசை எண் வழங்கப்படுகிறது.
இதில் பதிவு செய்த பிறகு, எல்லை வரம்பிற்குட்படாத முதல் தகவல் அறிக்கை ஆனது ஒடிசாவில் உள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு மேலும் விசாரணைக்காக மாற்றப் படுகிறது.
இந்த ஏற்பாடு விரைவான காவல் நடவடிக்கைக்கு உதவுவதோடு, அதிகார வரம்புகள் காரணமாக ஏற்படும் தாமதத்தைத் தவிர்க்கிறது.