எல்லைகளுக்கிடையிலான பாரத் கட்டண வழங்கீட்டு அமைப்பு மூலமான உள் வரவு
August 18 , 2022 1153 days 539 0
எல்லைகளுக்கிடையேயான உள்நாட்டு கட்டண வழங்கீடுகளைச் செயல்முறைப் படுத்துவதற்குப் பாரத் கட்டண வழங்கீட்டு அமைப்பிற்கு அனுமதி வழங்க உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
இந்தியாவில் பயன்பாடு சார்ந்தக் கட்டணங்களைச் செலுத்துவதில் சிக்கல்களை எதிர்கொள்ளும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இந்த அமைப்பு உதவும்.
இந்த முன்மொழிவானது ஏற்றுக் கொள்ளப் பட்டால், இது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்குப் பயனளிக்கும்.
பாரத் கட்டண வழங்கீட்டு அமைப்பு என்ற கருத்தானது மத்திய வங்கியினால் கருத்தாக்கப்பட்டது.
இது இந்தியத் தேசியப் பண வழங்கீட்டுக் கழகம் மற்றும் பாரத் கட்டண வழங்கீட்டு நிறுவனம் ஆகியவற்றினால் நடத்தப்படுகிறது.