எல்லைப் பிரிவு ஊர்க்காவல் படை
September 16 , 2025
14 hrs 0 min
21
- சீன எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள எல்லைப் பிரிவின் ஊர்க் காவல் படையினரின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
- அவசர காலங்களில் எல்லைப் பிரிவின் ஊர்க் காவல் படையினர் இராணுவம் மற்றும் பிற எல்லைப் படைகளுக்கு துணைப் படைகளாகச் செயல்படுகின்றனர்.
- தற்போது, 2,279 காவலர்கள் இராஜஸ்தானில் மட்டுமே செயலில் உள்ளனர்.
- இந்த நடவடிக்கையானது 3,488 கிலோமீட்டர் தூர சீன எல்லையில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படையை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- 2020 ஆம் ஆண்டு முதல், கிழக்கு லடாக்கில் 50,000க்கும் மேற்பட்ட இராணுவம் மற்றும் ITBP பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
Post Views:
21