எல்லைப்புற சாலைகள் அமைப்பின் ஸ்தாபன தினம் 2026 – மே 07
May 11 , 2026 4 days 57 0
எல்லைப்புற சாலைகள் அமைப்பு (BRO) 1960-ஆம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்டது.
இந்தியாவின் எல்லை மற்றும் தொலைதூரப் பகுதிகளில் சாலைகள், சுரங்கப் பாதைகள், பாலங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் BRO பொறுப்பாகும்.
இந்த அமைப்பு பல மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களில் உள்ள உயரமான மற்றும் பனி படர்ந்த பகுதிகளில் பணியாற்றுகிறது.
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள செலா சுரங்கப்பாதை மற்றும் லடாக்கில் அமைய உள்ள ஷிங்குன் லா சுரங்கப்பாதை ஆகியவை BRO-வின் முக்கிய திட்டங்களாகும்.
BRO-வின் தாரக மந்திரம் “ஷ்ரமேன சர்வம் சாத்யம்” என்பதாகும்; இதன் பொருள் "கடின உழைப்பின் மூலம் அனைத்தையும் சாதிக்க முடியும்" என்பதாகும்.