TNPSC Thervupettagam

எல்விரா எலி மற்றும் கட்ச் பாறை எலி

June 4 , 2026 12 days 102 0
  • பல்வேறு பாறை வாழ்விடங்களுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளும் தன்மையானது எல்விரா எலி மற்றும் கட்ச் பாறை எலியின் பிழைப்பு மற்றும் பரவலில் எவ்வாறு செல்வாக்குச் செலுத்துகிறது. 
  • எல்விரா எலி என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள சேர்வராயன் மலைகளில் மட்டுமே காணப்படும் மிக அருகி வரும் கொறித்துண்ணி இனமாகும்.
  • இது அரிதான ஷோன்கினைட் பாறை அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உடையதாகும், மேலும் கிரானைட், குவார்ட்சைட், பசால்ட் மற்றும் தக்காணப் பொறி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு பாறை வாழ்விடங்களுக்கு ஏற்ப நன்கு தகவமைத்துக் கொள்ள முடிவதால், கட்ச் பாறை எலி பரவலான வாழ்விடங்களில் காணப்படுகிறது.
  • எல்விரா எலி மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்விட வரம்பைக் கொண்டுள்ளது; அதே சமயம் கட்ச் பாறை எலி தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளில் காணப் படுவதால், அவை ஒப்பீட்டளவில் அதிக மீள்திறனைக் கொண்டுள்ளன.
  • வங்காள நரி மற்றும் பல இரைகௌவிப் பறவையினங்களுக்கு இரையாகும் விலங்காகக் கட்ச் பாறை எலி முக்கிய சூழலியல் பங்கை வகிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்