TNPSC Thervupettagam

எல்விவ் நகரின் வரலாற்று மையம் – யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம்

March 29 , 2026 2 days 41 0
  • உக்ரைனின் எல்விவ் நகரின் வரலாற்று மையத்தில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளத்தின் பெர்னார்டைன் மடாலயத்திற்கு அருகில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடம் ரஷ்ய ஆளில்லா விமானத் தாக்குதலால் சேதமடைந்தது.
  • எல்விவ் வரலாற்று மையம் அதன் சிறந்த கட்டிடக்கலை மற்றும் கலாச்சார மதிப்பிற்காக 1998 ஆம் ஆண்டில் யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளமாக அங்கீகரிக்கப்பட்டது.
  • இந்த நகரம் பரோக், மறுமலர்ச்சி, நவீனசெவ்வியல் மற்றும் மத்திய-கிழக்கு ஐரோப்பிய கட்டிடக்கலை பாணிகளின் தனித்துவமான கலவையை பிரதிபலிக்கிறது.
  • இது 13ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கலிசியாவின் மன்னர் டேனியலால் நிறுவப் பட்டது.
  • இந்தத் தளத்தில் 2,000-க்கும் மேற்பட்ட பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க வீடுகளைக் கொண்ட புகழ்பெற்ற ரினோக் சதுக்கம் ஆகியவை உள்ளன.
  • மோதல் மண்டலங்களில் உள்ள யுனெஸ்கோ தளங்கள், கலாச்சார சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான 1954ம் ஆண்டு ஹேக் ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப் படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்