சர்வதேச பயணத்திற்கான எளிதான இணைப்பு மாதிரியில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தியாவின் முதல் நகரமாக உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி உருவெடுத்துள்ளது.
புதிய மாதிரியின் கீழ், வாரணாசியைச் சேர்ந்த சர்வதேசப் பயணிகள் டெல்லியை அடைவதற்கு முன்பே குடியேற்றம் மற்றும் பயணப்பொதி நடைமுறைகளை முடித்துக் கொள்ளலாம், இது தடையற்ற சர்வதேச இணைப்புகளை செயல்படுத்துகிறது.
பிராந்திய நகரங்களுக்கும் உலகளாவிய இடங்களுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தியாவின் hub-and-spoke விமானப் போக்குவரத்து உத்தியின் தொடக்கத்தை இந்த முன்னெடுப்பு குறிக்கிறது.
இத்திட்டமானது பயணிகள் இடமாற்றங்களை எளிதாக்குவதற்கும், போக்குவரத்து சிரமங்களைக் குறைப்பதற்கும் மற்றும் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கும் முயல்கிறது.
பெருநகரங்களைத் தாண்டி உலகத்தரம் வாய்ந்த சர்வதேச இணைப்பை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த முன்னெடுப்பு ஒத்துப் போகிறது.
எளிதான இணைப்பு மாதிரியானது பிராந்திய விமான நிலையங்களின் பங்கை வலுப்படுத்தும் மற்றும் இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறை மற்றும் உள்வரும் சுற்றுலாவில் சமநிலையான வளர்ச்சியை ஊக்குவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.