எஸ்.சி/எஸ்.டி (Scheduled Caste/Scheduled Tribe) சமூகத்திற்கு பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டின் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
September 30 , 2018 2420 days 836 0
2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி உச்ச நீதிமன்றம், பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான (Scheduled Caste/Scheduled Tribe) பணியிடப் பதவி உயர்விற்கான இட ஒதுக்கீட்டிற்காக மாநிலங்கள் அவர்களது பிற்படுத்தப்பட்ட நிலைமைக்கான அளவிடப்படக்கூடிய தகவல்களை சேகரிக்க வேண்டாம் என்று தீர்ப்பளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் தனது 2006ம் ஆண்டின் M. நாகராஜ் எதிர் (Vs) இந்திய அரசு என்ற வழக்கின் தீர்ப்பிற்கு எதிரான மனுக்களை 7 நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றுவதற்கு மறுத்துள்ளது.
2006 ஆம் ஆண்டின் M. நாகராஜ் எதிர் (Vs) இந்திய அரசு என்ற வழக்கில் உச்ச நீதிமன்றமானது எஸ்.சி/எஸ்.டி சமூகத்தினருக்கான (பதவி உயர்வுக்கான காரணத்திற்காக) இடஒதுக்கீட்டை அளிப்பதில் விதிமுறைகளை வகுத்து இருந்தது.
தற்போது உச்ச நீதிமன்றம், பிற்படுத்தப்பட்ட நிலையை உறுதி செய்வதற்கான அளவிடப்படக்கூடிய தகவல்களை சேகரிப்பது என்பதன் மீதான தனது முந்தைய தீர்ப்பை மாற்றியமைத்திருக்கின்றது.
அவ்வழக்கின் தீர்ப்பு (2006-ம் ஆண்டு) 1992 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பிற்கு எதிராக உள்ளதாக கருதப்படுகின்றது.
அவ்வழக்கில் அரசியலமைப்பின் 341 மற்றும் 342 விதிகளின் படி ஒருமுறை எஸ்சி/எஸ்டி சமூகத்தினர் ஜனாதிபதி ஆணையில் இடம்பெற்றால் அவர்களது பிற்படுத்தப்பட்ட நிலைமையை உறுதி செய்யத் தேவையில்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.