அறிவியலாளர்கள் எஸ்கெரிச்சியா கோலே பாக்டீரியாவை மின் சமிக்ஞைகளை உருவாக்கும் சுய ஆற்றலில் இயங்கும் வேதியியல் உணரிகளாக செயல்படச் செய்யும் வகையில் மரபணு ரீதியாக மாற்றியமைத்துள்ளனர்.
இந்த பாக்டீரியாவானது குறிப்பிட்ட இரசாயனங்களைக் கண்டறிந்து, சமிக்ஞைகளைச் செயலாக்கி, அளவிடக் கூடிய மின்னூட்டங்களை உருவாக்கும் பினாசின்களை உருவாக்குகிறது.
இந்த முன்னேற்றம் ஆனது, குறைந்த விலை, நிரல்படுத்தக்கூடிய உயிரி உணர்விகளை (பயோசென்சர்) மின்னணு சாதனங்களுடன் நேரடியாக ஒருங்கிணைக்க உதவுகிறது.