ஏ. எஸ். ராஜீவ் - பொறுப்பு வகிக்கும் மத்திய விழிப்புணர்வு ஆணையர்
August 12 , 2026 21 hrs 0 min 67 0
மத்திய விழிப்புணர்வு ஆணையராக (CVC) செயல்பட, விழிப்புணர்வு ஆணையர் ஏ. எஸ். ராஜீவ் அவர்களுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.
பதவிக்காலம் நிறைவடைந்த பிரவீன் குமார் ஸ்ரீவாஸ்தவாவிற்குப் பிறகு இவர் இப்பொறுப்பை ஏற்றுள்ளார்.
பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் உள்ள பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் (DoPT) இது குறித்த அறிவிப்பு வெளியிடப் பட்டது.
இந்திய அரசின் தீர்மானத்தின் மூலம், 1964 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 அன்று மத்திய விழிப்புணர்வு ஆணையம் (CVC) ஒரு நிர்வாக அமைப்பாக நிறுவப்பட்டது.
கே. சந்தானம் தலைமையிலான ஊழல் தடுப்புக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் இது அமைக்கப்பட்டது.
அரசுத் துறைகளில் நிலவும் ஊழலைக் கையாள்வதை இது நோக்கமாகக் கொண்டு உள்ளது.
2003ம் ஆண்டில், நாடாளுமன்றம் இயற்றிய சட்டத்தின் மூலம் CVC-க்குச் சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கப்பட்டதோடு இது எந்தவொரு நிர்வாக அதிகார அமைப்பின் கட்டுப்பாட்டிற்கும் உட்படாத ஒரு தன்னாட்சி அமைப்பாகச் செயல்படுகிறது.
இந்திய மத்திய அரசின் கீழ் நடைபெறும் அனைத்து விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் கண்காணிப்பதும், மத்திய அரசு நிறுவனங்களில் விழிப்புணர்வுப் பணிகளைத் திட்டமிடுதல், செயல்படுத்துதல், ஆய்வு செய்தல் மற்றும் சீரமைத்தல் ஆகியவற்றில் பல்வேறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்குவதும் இதன் பொறுப்பாகும்.
CVC ஒரு புலனாய்வு அமைப்பு அல்ல; அரசாங்கத்தின் சிவில் பணிகளை ஆய்வு செய்வது மட்டுமே CVC மேற்கொள்ளும் ஒரே புலனாய்வு நடவடிக்கையாகும்.