ஏரி தூய்மைப்படுத்துதலுக்கான புதிய வேதியியல் சுத்திகரிப்பு தொழில்நுட்பம்
September 22 , 2017 2865 days 2098 0
"CV தொழில்நுட்பம்" எனும் வேதியியல் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஹைதராபாத்திலுள்ள உசைன்சாகர் ஏரியை விஞ்ஞானிகள் சுத்திகரித்துள்ளனர்.
இதன்வழி சுத்திகரிக்கப்பட்ட நீர் உலக சுகாதார நிறுவன மற்றும் இந்திய தரச்சான்று நிலைகளை அடைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ்வேதியியல் சுத்திகரிப்பு முறை உயிரியல் சுத்திகரிப்பு முறையை பயன்படுத்தும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை விட (Sewage treatment plant) வேகமாக சுத்திகரிக்க வல்லன.
இந்த சுத்திகரிக்கப்பட்டுள்ள நீரில் BOD எனப்படும். உயிரியல் ஆக்ஸிஜன் தேவை அளவு குறைந்திருப்பதும், தண்ணீர் தரத்திற்கான 12 அளவுருக்கள் (Parameter) மேம்பட்டிருப்பதும், மொத்த திட கரைபொருள் (TDS) அளவு அதிகரித்திருப்பதும், உலோக அயனிகளின் அளவு கணிசமாக குறைந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
BOD – உயிரியல் ஆக்ஸிஜன் தேவை (Biological Oxygen demand)
நுண்ணுயிரிகள் நீரிலுள்ள கரிமப் பொருட்களை மக்கச்செய்ய கட்டாயமாக தேவைப்படும் கரைந்த ஆக்ஸிஜன் அளவே (Dissolved Oxygen) BOD எனப்படும்.
இவை நீரின் தரத்தை அல்லது நீரின் மாசுபாட்டு அளவை கண்டறிய பயன்படும்.
குறைந்தபட்ச BOD அளவானது ஆக்ஸிஜன் சார்ந்த உயிர்களுக்கு நீரானது உயிர்வாழ பொருந்தக்கூடிய நிலையில் உள்ளது என்பதை குறிக்கும்.