ஏர் இந்தியா நிறுவனத்துடன் விஸ்தாரா நிறுவனம் இணைப்பு
December 2 , 2022 993 days 533 0
விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனமானது, 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்துடன் இணைக்கப்பட உள்ளது.
2013 ஆம் ஆண்டில் கூட்டுத் துணிகர முயற்சியாக நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தின் 51 சதவீதப் பங்கினை டாடா குழுமமும், மீதமுள்ள 49 சதவீதப் பங்கினை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமும் வைத்துள்ளன.
டாடா நிறுவனமானது, ஒரு வருடத்திற்கு முன்பு அரசின் முதலீட்டுச் சேமிப்பு மீட்பு என்ற முறையின் ஒரு பகுதியாக 18,000 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது.