TNPSC Thervupettagam

ஏர் இந்தியா – டாடா குழுமம்

January 30 , 2022 1282 days 555 0
  • இந்திய அரசானது இந்தியாவின் முதன்மையான விமான நிறுவனமான ஏர் இந்தியாவினை 2022 ஆம் ஆண்டு ஜனவரி 20 அன்று அதிகாரப் பூர்வமாக டாடா குழுமத்திடம் ஒப்படைத்தது.
  • இந்த நிறுவனத்தைக் கையகப்படுத்தி கிட்டத்தட்ட 69 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பானது ரூ.18,000 கோடி (2.4 பில்லியன் டாலர்) ஆகும்.
  • இந்த மூலோபய முதலீட்டு விலக்குப் பரிவர்த்தனையானது நிர்வாக கட்டுப்பாட்டுடன் சேர்த்து ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள இந்திய அரசின் 100% அளவிலான பங்கினைப் பரிமாற்றம் செய்வதையும் உள்ளடக்கியதாகும்.
  • இந்தப் பரிமாற்றத்தில் ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் இந்தியா SATS உள்ளிட்ட நிறுவனங்களும் அடங்கும்.
  • இந்த நிறுவனமானது, 1932 ஆம் ஆண்டில் கராச்சிக்கும் பம்பாய்க்கும் இடையில் JRD டாடா  முதல் விமானத்தை இயக்கியதோடு சேர்த்து தொடங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்