TNPSC Thervupettagam

ஏற்றுமதி தயார்நிலை குறியீடு 2024

January 21 , 2026 10 hrs 0 min 7 0
  • இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் ஏற்றுமதி தயார்நிலையை மதிப்பிடுவதற்காக நிதி ஆயோக் அமைப்பு 2024 ஆம் ஆண்டு ஏற்றுமதி தயார்நிலை குறியீட்டினை (EPI) வெளியிட்டுள்ளது.
  • ஏற்றுமதி ஆயத்த குறியீடு (EPI) என்பது ஏற்றுமதி உள்கட்டமைப்பு, வணிக சுற்றுச்சூழல் அமைப்பு, கொள்கை ஆதரவு மற்றும் ஏற்றுமதி செயல்திறனை அளவிடும் ஒரு கூட்டு குறியீடாகும்.
  • EPI 2024 என்பது நான்காவது குறியீடாகும் என்பதோடு இது முதலில் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டது.
  • இந்தக் குறியீடு அதிகாரப்பூர்வ அரசாங்கத் தரவைப் பயன்படுத்துகின்ற 4 தூண்கள், 13 துணைத் தூண்கள் மற்றும் 70 குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டது.
  • மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்கள் செயல்திறனை அடிப்படையாகக் கொண்டு முன்னிலையில் உள்ளவை, சவாலை எதிர்கொள்பவை மற்றும் ஆர்வ மிக்கவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • மகாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் குஜராத் ஆகியவை பெரிய மாநிலங்களில் முன்னணியில் உள்ளன அதே நேரத்தில் உத்தரகாண்ட் மற்றும் ஜம்மு & காஷ்மீர் சிறிய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேச பிரிவுகளில் முன்னணியில் உள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்