இந்தியாவின் 7-வது மண்டல வானிலை ஆய்வு மையமானது (RMC) 2026 ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று ஜம்முவில் திறக்கப்பட்டது.
இந்த மண்டல வானிலை ஆய்வு மையம் ஜம்மு & காஷ்மீர், லடாக் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய பகுதிகளுக்குச் சேவைகளை வழங்குகிறது.
இது மாவட்ட அளவிலான முன்னறிவிப்புகள், மலைப்பகுதி சார்ந்த வானிலை முன்னறிவிப்புகள், சுற்றுலாப் பயணிகளுக்கான ஆலோசனைகள் மற்றும் பேரிடர் எச்சரிக்கைகளை வழங்கும்.
திடீர் வெள்ளம், மேக வெடிப்பு, பனிச்சரிவுகள், நிலச்சரிவுகள், இடியுடன் கூடிய மழை மற்றும் அதிக பனிப்பொழிவு ஆகியவற்றுக்கான முன் எச்சரிக்கைகளை இம்மையம் வெளியிடும்.
இது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) மண்டல முன்னறிவிப்பு கட்டமைப்பின் மறுசீரமைப்பைக் குறிக்கிறது.
லக்னோவிலும் ஒரு புதிய மண்டல வானிலை ஆய்வு மையத்தை (RMC) அமைக்க முன்மொழியப் பட்டுள்ளது.