ஐ.நா.வின் சமூக-பொருளாதார, கலாச்சாரக் குழு - பிரீத்தி சரண்
December 8 , 2018 2412 days 843 0
முன்னாள் மூத்த இந்திய அரசுத் தூதரான பிரீத்தி சரண் ஐ.நா.வின் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திற்கான சமூக-பொருளாதார கலாச்சார உரிமைக் குழுவிற்கு (CESCR - Committee on Economic, Social and Cultural Rights) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 4 ஆண்டுகள் இப்பதவியில் இருப்பார்.
18 உறுப்பினர்கள் கொண்ட வல்லுநர் குழுவிற்கான இத்தேர்தலானது ஐ.நா.வின் பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தால் நடத்தப்பட்டது (ECOSOC - UN’s Economic and Social Council).
பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான குழு
CESCR ஆனது 1985 ஆம் ஆண்டில் ECOSCO ஆல் ஏற்படுத்தப்பட்டது.
CESCR ஆனது பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கையின் செயல்பாட்டைக் கண்காணிக்கும்.
CESCR சந்திப்பானது ஒவ்வொரு ஆண்டும் நான்கு வாரங்களுக்கு ஜெனீவாவில் நடைபெறும்.