ஐஎன்எஸ் அஜய் கப்பலானது 1990 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று முன்னாள் சோவியத் ஒன்றியத்தின் ஜார்ஜியாவின் போட்டி எனும் நகரில் படையில் இணைக்கப் பட்டது.
32 ஆண்டுகள் நம் நாட்டிற்கு மகத்தானச் சேவை வழங்கிய இந்தக் கப்பல் பின்னர் படையிலிருந்து நீக்கப்பட்டது.
கார்கில் போரின் போது நடைபெற்ற தல்வார் நடவடிக்கை மற்றும் 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற பராக்கிரம் நடவடிக்கை உட்பட பல கடற்படை சார்ந்த நடவடிக்கைகளில் இந்தக் கப்பல் பங்கேற்றது.