TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் இம்பால்

April 21 , 2019 2280 days 764 0
  • இந்தியக் கடற்படையானது மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் தளத்தில் வழிகாட்டும் ஏவுகணை அழிப்பானான இம்பாலை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • வட கிழக்கு மாநிலத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயரால் வழங்கப்படும் முதலாவது போர்க் கப்பல் இதுவாகும்.
  • “திட்டம் 15-பி” என்பதின் கீழ் உருவாக்கப்பட்ட மூன்றாவது கப்பல் இம்பாலாகும். இதற்கு முன் இத்திட்டத்தின் கீழ் விசாகப்பட்டினம் மற்றும் மர்மகோவா ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.
  • இது மசகான் கப்பல் கட்டும் தளத்தில் கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்குனரகத்தால் (Directorate of Naval Design) உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது.
  • இந்தியக் கடற்படைக் கப்பல்களின் பெயர்கள்
கப்பல் வகை
பெயர்
உதாரணம்
அழிப்பான்கள் மாநிலத் தலைநகரம் (அ) பெரும் நகரம் ஐஎன்எஸ் தில்லி, ஐஎன்எஸ் சென்னை
சிறிய ரக போர்க் கப்பல்கள் மலைத் தொடர்கள், நதிகள், (அ) ஆயுதங்கள் ஐஎன்எஸ் சிவாலிக், ஐஎன்எஸ் திரிசூல்
வழித் துணைக் கப்பல்கள் சிறிய ரக தனிப்பட்ட ஆயுதங்கள்

ஐஎன்எஸ் கிர்பான்

ஐஎன்எஸ் கஞ்சர்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்